அவள் ஓர் உயிர் கொல்லி

என் இதழ்களின் ஓரம்

மெல்லியதாய் ஓர் ரத்த கசிவு ..

அவளின் விளையாட்டுதான்!!!!

தூரமாக போய் கண் சுருக்கி

என்னை நோக்கிடின்

ஒரு நிமிடம் உயிர் கரையும்!!!!

பிரிவுகளில் என்றேனும் ஒரு துளி நீர் தேடிடுவேன்

காதல் கிறுக்கி ஒருநாளும் சிந்தியதே இல்லை !!!!

தீர்க்கமான பார்வைகள் வீசி கூசிட செய்வாள்

நரம்பிலா வார்த்தைகள் பேசி பலியிட்டு கொள்வாள் !!!!

அளவில்லா அன்பை அறியாமலேயே எய்து

எனை கொள்ளும் உயிர் கொல்லி அவள்

Advertisements